/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைமேம்பாலம் அமைப்பதே தீர்வு
/
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைமேம்பாலம் அமைப்பதே தீர்வு
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைமேம்பாலம் அமைப்பதே தீர்வு
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து நடைமேம்பாலம் அமைப்பதே தீர்வு
ADDED : ஜூலை 09, 2025 02:11 AM

திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, அதிவிரைவு நெடுஞ்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, திருமழிசை, செம்பரம்பாக்கம், தண்டலம், இருங்காட்டுகோட்டை என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
குறிப்பாக, நசரத்பேட்டை - ஸ்ரீபெரும்புதுார் வரை தனியார் பள்ளி, கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றனர்.
இவ்வாறு நெடுஞ்சாலையை கடந்து செல்லும் போது, அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக இருங்காட்டுகோட்டை, தண்டலம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்துகளை தடுக்க நசரத்பேட்டை, வரதராஜபுரம், திருமழிசை, செம்பரம்பாக்கம், செட்டிபேடு, பாப்பன்சத்திரம், தண்டலம், இருங்காட்டுகோட்டை ஆகிய பகுதிகளில், நெடுஞ்சாலை குறுக்கே நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.