/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய் படுமோசம் தண்ணீர் செல்வதில் சிக்கல்
/
மழைநீர் கால்வாய் படுமோசம் தண்ணீர் செல்வதில் சிக்கல்
மழைநீர் கால்வாய் படுமோசம் தண்ணீர் செல்வதில் சிக்கல்
மழைநீர் கால்வாய் படுமோசம் தண்ணீர் செல்வதில் சிக்கல்
ADDED : செப் 10, 2025 03:22 AM

மீஞ்சூர்:மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பின்றி செடிகள் வளர்ந்து படுமோசமான நிலையில் இருப்பதால், ஏரி மற்றும் குளத்திற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிப்பாளையத்தில், ஏரி மற்றும் குளத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. கால்வாய் முழுதும் செடிகள் வளர்ந்துள்ளன. மேலும், கரைகளும் ஆங்காங்கே சரிந்து விழுந்துள்ளன.
தேங்கியுள்ள தண்ணீரில் ஆகாயத்தாமரை சூழ்ந்துள்ளது. கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமும் குறுகலாக அமைந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சீமாவரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், இக்கால்வாய் வழியாக ராமரெட்டிப்பாளையம் குளம் மற்றும் மீஞ்சூர் ஏரிக்கு செல்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், கிராம மக்களின் சொந்த முயற்சியில் கால்வாய் துார்வாரி சீரமைக்கப்பட்டது. அதன்பின், கவனிப்பாரின்றி உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், குளம் மற்றும் ஏரியில் மழைநீர் சேமிக்கும் வகையில், கால்வாயை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.