UPDATED : அக் 07, 2026 02:22 AM
ADDED : அக் 06, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், ஆர்.வி.என்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த, 16 வயது மாணவன், கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 1 படித்து வருகிறார்.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நேற்று முன்தினம் வழக்கம் போல் காலையில் பள்ளிக்கு சென்றார். இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
அவரது பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து, மாணவனின் தந்தை கொடுத்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
