UPDATED : அக் 06, 2026 10:37 PM
ADDED : அக் 06, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருவள்ளூர் அடுத்த புட்லுார் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புவனா, 22. இவர், கடந்த 2ம் தேதி, பெல்ட் மற்றும் பணப்பை வியாபாரம் செய்வதற்கு, திருத்தணி நகருக்கு வந்தார்.
பின், ஆந்திர மாநிலம் நகரிக்கு சென்று வியாபாரம் செய்தார். மாலை, நகரியில் இருந்து திருத்தணி நகருக்கு வரும் அரசு பேருந்தில், புவனா பயணம் செய்தார்.
ஆனால், புவனா எங்கு இறங்கி சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. புவனா வீட்டிற்கு வராததால், பல இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடினர்.
எங்கும் அவர் கிடைக்காததால், நேற்று திருத்தணி போலீஸ் நிலையத்தில், புவனாவின் தந்தை லால் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
