/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆகாயத்தாமரை சூழ்ந்த கோவில் குளம் உவர்ப்புதன்மை அதிகரிக்கும் அபாயம்
/
ஆகாயத்தாமரை சூழ்ந்த கோவில் குளம் உவர்ப்புதன்மை அதிகரிக்கும் அபாயம்
ஆகாயத்தாமரை சூழ்ந்த கோவில் குளம் உவர்ப்புதன்மை அதிகரிக்கும் அபாயம்
ஆகாயத்தாமரை சூழ்ந்த கோவில் குளம் உவர்ப்புதன்மை அதிகரிக்கும் அபாயம்
ADDED : நவ 25, 2024 02:24 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமரெட்டிப்பாளையம் பகுதியில், வரசித்தி விநாயகர் கோவிலின் பின்புறம் குளம் அமைந்துள்ளது. பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் இக்குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்து பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது. இதனருகே அரசு பள்ளி செயல்படும் நிலையில், குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி வருகிறது.
மீஞ்சூர் பகுதியில் நிலத்தடி நீர் உவர்ப்புதன்மை அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற நீர்நிலைகளை பேரூராட்சி நிர்வாகம் பராமரிப்பதில் அலட்சியம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;
மீஞ்சூர் பகுதியின் குடிநீர் தேவைக்காக வன்னிப்பாக்கம், சீமாவரம் பகுதிகளில் உள்ள கொற்றலை ஆற்று கரைகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
அதே சமயம் நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் உரிய முறையில் பராமரித்து, அதில் மழைநீர் சேமித்து நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு தேவையான திட்டமிடல்கள் எதுவும் இல்லை.
ராமரெட்டிப்பாளையம் குளத்தை சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையால், மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலையும், அதில் தேங்கும் குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.