/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மதுவிலக்கு பிரிவு போலீசில் 20க்கு 6 பேர் பணிபுரியும் அவலம் போதை பொருள் கடத்தல் தடுப்பதில் சிக்கல்

ADDED : ஜூன் 03, 2025 07:56 PM
திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., சிறப்பு எஸ்.ஐ., உட்பட 18 பேர் என, மொத்தம் 20 பேர் பணியாற்ற வேண்டும்.
இவர்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து சாராயம், கஞ்சா மற்றும் குட்கா போன்றவை கடத்தி வருவதை தடுக்கவும், திருத்தணி வருவாய் கோட்டத்தில் சாராயம், கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது பணிகளை மேற்கொள்கின்றனர்.
ஏழு மாதங்களுக்கு மேலாக மதுவிலக்கு பிரிவில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., பணியிடம் காலியாக உள்ளன. இதுதவிர, எட்டு போலீசார் பணியிடமும் காலியாக உள்ளன. மீதமுள்ள 10 காவலர்களில், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு நீதிமன்ற பணிகளுக்கு இரண்டு பேர் சென்று விடுகின்றனர்.
மேலும் ஒருவர் கம்ப்யூட்டர் தட்டச்சர், மற்றொருவர் சிறப்பு பணி என, நான்கு பேர் இருக்கின்றனர். இதனால், வெறும் ஆறு போலீசார் மட்டுமே கடத்தல் தடுத்தல், 'ரெய்டு' நடத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.
இதிலும், நான்கு போலீசார் திருவிழா, தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர் பாதுகாப்புக்கு சென்று விடுகின்றனர். இதனால், இருவர் மட்டுமே பணிபுரிவதால், ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் எளிதல் கடத்தி செல்கின்றனர்.
எனவே, மாவட்ட எஸ்.பி., விரைந்து நடவடிக்கை எடுத்து, மதுவிலக்கு பிரிவில் கூடுதல் போலீசார் மற்றும் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.