/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலையில்லாதோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
/
வேலையில்லாதோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 06, 2024 12:55 AM
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், படித்து முடித்து பதிவு செய்து 5 ஆண்டுக்கு மேலாகி எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு 200, தேர்ச்சி பெற்றோருக்கு 300; மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றோருக்கு 400 மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம் மூன்றாண்டுகள் உதவித்தொகை வழங்கப்படும்.
அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும், மாதம் ஒன்றுக்கு முறையே 600, 750 மற்றும் 1,000 ரூபாய் வீதம் 10 ஆண்டுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உடனடியாக திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் அணுகவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.