/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை புதராகவும், 'பார்' ஆகவும் மாறிய அவலம்

ADDED : டிச 09, 2024 02:23 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி. இங்குள்ள போளிவாக்கம் சத்திரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, போளிவாக்கம் சத்திரம், குன்னத்துார் உட்பட ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவியர் மற்றும் பகுதிவாசிகள், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடை போதிய பராமரிப்பு இல்லாததால் விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடம் மற்றும் மது அருந்தும் கூடாரமாகவும் மாறியுள்ளது.
இதனால் இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்த வரும் மாணவ -- மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாக்குபேட்டை பகுதியில் பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை செடிகள் வளர்ந்து புதருக்குள் மாயமாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.