/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத வாசீஸ்வரர் கோவில் குளம் குப்பை கிடங்காக மாறி வரும் அவலம்

ADDED : நவ 28, 2024 12:30 AM

திருப்பாச்சூர்:
27.11.2024/கடம்பத்துார் /தி.நடராஜசிவா/ 7904308590/ கீ:1145 / 1:00 ****
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில்.
இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கடம்பத்துார் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. தற்போது மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தும் இந்த குளத்தில் ஒரு சொட்டு நீர் இல்லாதது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் குளத்திற்கு வரும் வரத்துக் கால்வாய்கள் அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்து போனதால், குளத்திற்கு நீர் வருவது, தடைபட்டுள்ளது என பக்தர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை பக்தர்கள் புகார் அளித்தும் அறநிலையத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குளம் வறண்டு கிடப்பதால் விளையாட்டு மைதானமாகவும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இது பக்தர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறையினர் வாசீஸ்வரர் சுவாமி கோவில் குளத்திற்கு நீர் சேகரமாகும் வகையில் சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.