/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வியாபாரி மீது தாக்குதல் சிகிச்சையில் இருந்தவர் பலி
/
வியாபாரி மீது தாக்குதல் சிகிச்சையில் இருந்தவர் பலி
வியாபாரி மீது தாக்குதல் சிகிச்சையில் இருந்தவர் பலி
வியாபாரி மீது தாக்குதல் சிகிச்சையில் இருந்தவர் பலி
ADDED : அக் 18, 2024 02:36 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன், 40. இவர் மீஞ்சூர் பஜார் பகுதியில் காலணி மற்றும் ஸ்டேஷ்னரி பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார்.
கடந்த, 14ம் தேதி இரவு, விற்பனை முடிந்து கடையை பூட்டிக்கொண்டு, பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ஆஞ்சிநேயர் கோவில் அருகே செல்லும்போது, எதிரில் வந்த பைக்குடன், சையது உசேன் ஓட்டிச்சென்ற பைக் மோதியது.
அப்போது பைக்கில் இருந்த அடையாளம் தெரியாத நபர், சையது உசேனிடம் தகராறு செய்தார். பின், அங்கிருந்த கல்லை எடுத்து சையது உசேனின் தலையில் தாக்கி விட்டு தப்பினார்.
தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் சையது உசேனை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சையில் இருந்த சையது உசேன் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு இறந்தார்.
போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ' சிசிடிவி' க்களை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகத்தின்பேரில், இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.