/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகாரிகளை கண்டித்து கிராமவாசிகள் போராட்டம்
/
அதிகாரிகளை கண்டித்து கிராமவாசிகள் போராட்டம்
ADDED : பிப் 20, 2024 10:35 PM
சோழவரம்,:சோழவரம் ஒன்றிய, நெற்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கஞ்சேரியில், கொசஸ்தலை ஆற்றிற்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது.
கடந்த ஆண்டு மழையின்போது, கால்வாய் கரை மழைநீரில் அரித்துச் செல்லப்பட்டது.
இதனால் அருகில் வசிக்கும் செக்கஞ்சேரி குடியிருப்புவாசிகள் மற்றும் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மேலும், நெற்குன்றம் கிராமத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்திற்கு, புதியது அமைக்கப்படாமல் மாணவர்கள் அங்குள்ள கிராம சேவை மையத்தில் படிக்கும் நிலை உள்ளது.
இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ., மற்றும் அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. இவற்றிற்கு தீர்வு ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, நேற்று நெற்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், நெற்குன்றம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள ஊராட்சி அலுவலகம் மற்றும் வி.ஏ.ஓ., அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த சோழவரம் ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
கோரிக்கைகள் தொடர்பாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, கிராமவாசிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

