ADDED : செப் 26, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த 23 வயது பெண், கணவருடன் நேற்று முன்தினம் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தார்.
பின், இரவு திருக்குளம் சரவணபொய்கை கோவில் விடுதி அருகே ஒரு வீட்டின் திண்ணையில், இருவரும் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அவரது கணவர் வாலிபரை தாக்கினார். அந்த வாலிபர் அப்பெண்ணை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அங்கிருந்தோர் அவரை பிடித்து திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அரக்கோணம் காந்திநகரைச் சேர்ந்த பார்த்திபன், 28, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

