நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூரில் மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் காந்தி சாலை பகுதியைச் சேர்ந்தவர் எட்வர்ட் ஜெயசிங், 63. இவரது இரண்டாவது மகன் அருள்ராஜ், 31. திருமணமகாத இவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 28ம் தேதி ஜெயசிங் மனைவியுடன் கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று விட்டு பின் வீடு திரும்பியபோது அருள்ராஜ் வீட்டில் இல்லை. உறவினர்கள் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அருள்ராஜ் கிடைக்கவில்லை.
ஜெயசிங் அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் நகர போலீசார், மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

