sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 11ல் தீமிதி திருவிழா

/

திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 11ல் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 11ல் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் வரும் 11ல் தீமிதி திருவிழா


ADDED : ஏப் 25, 2025 02:19 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் மே மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று காலை 4:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 8:00 மணிக்கு உற்சவர் அம்மன் மலர் அலங்காரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தினமும் காலை மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனையும், மதியம் 1:00 முதல் மாலை 5:30 மணி வரை மஹாபாரத சொற்பொழிவும் நடக்க உள்ளது. வரும் 11ம் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us