/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூட்டை உடைத்து 18 சவரன் திருட்டு
/
பூட்டை உடைத்து 18 சவரன் திருட்டு
ADDED : ஜன 02, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொன்னேரி: பொன்னேரி அடுத்த கம்மாளமடம் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, 50. இவர், செங்குன்றம் பகுதியில், சகோதரி வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் சரஸ்வதி வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 18 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், 25,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரிந்தது.இது குறித்து சரஸ்வதி திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

