/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செவிலியர் வீட்டில் 20 சவரன் திருட்டு
/
செவிலியர் வீட்டில் 20 சவரன் திருட்டு
ADDED : மார் 12, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி, பக்தவச்சலம் நகரில் வசிப்பவர் ராஜலட்சுமி, 58. மணலி புதுநகர் அரசு மருத்துவமனை செவிலியர். இம்மாதம், 6ம் தேதி, குடும்பத்துடன், சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்ட உறவினர் ஒருவர், ராஜலட்சுமிக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
இடைப்பட்ட நாட்களில், சுவர் ஏறி குதித்து, வீட்டின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், இரு அறைகளில் இருந்து பீரோக்களை உடைத்துள்ளனர். அதலிருந்த, 20 சவரன் நகை, 10,000 ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

