/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : நவ 12, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, கால பைரவர் கோவிலில், தேய்பிளை அஷ்டமி பூஜை நடந்தது.
ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில் மகா காலபைரவர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பு வாய்ந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பின், யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. உற்சவர் கோவிலை மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

