/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மங்களீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
/
மங்களீஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்
ADDED : மார் 09, 2024 10:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி கிராமத்தில் உள்ள சர்வ மங்களீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா முன்னிட்டு நேற்று முன்தினம், இரவு, 9:00 மணி முதல் நேற்று அதிகாலை, 5:00 மணி வரை மூலவருக்கு ஆறுகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 10:30 மணிக்கு உற்சவர் மங்களீஸ்வரர் மற்றும் சர்வமங்களாம்பிகை அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் இரவு கோவில் எதிரே உள்ள குளத்தில் உற்சவர் மங்களீஸ்வரர் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை ஏழு முறை வலம் வந்து அருள்பாலித்தார்.

