/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சின்னம்மாபேட்டையில் பார் வசதியில்லாததால் சாலையோரத்தில் மது அருந்தும் 'குடி'மகன்கள்
/
சின்னம்மாபேட்டையில் பார் வசதியில்லாததால் சாலையோரத்தில் மது அருந்தும் 'குடி'மகன்கள்
சின்னம்மாபேட்டையில் பார் வசதியில்லாததால் சாலையோரத்தில் மது அருந்தும் 'குடி'மகன்கள்
சின்னம்மாபேட்டையில் பார் வசதியில்லாததால் சாலையோரத்தில் மது அருந்தும் 'குடி'மகன்கள்
ADDED : பிப் 13, 2024 06:23 AM

திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டையில் தக்கோலம் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.
ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள இக்கடை, கிராமப்புற கடைகளில் அதிக வருமானம் ஈட்டுகிறது.
இந்த மதுபான கடைக்கு கடம்பத்துார் துவங்கி, மோசூர் வரை உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் குடிமகன்கள் வந்து செல்ல வசதியாக ரயில் நிலையம் அருகே உள்ளது.
அவ்வாறு வரும் குடிமகன்கள் மது அருந்தி செல்ல பார் வசதி இல்லாததால், சாலையோரம் அமர்ந்து குடிக்கின்றனர்.
இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லுாரி சென்று வீடு திரும்பும் மாணவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் பணிக்கு சென்று வீடு திரும்பும் பெண்களை போதை ஆசாமிகள் அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதால் அவர்கள் அச்சமடைகின்றனர்.
எனவே சாலையோரங்களில் அமர்ந்து குடிப்போர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
l திருவள்ளூர் -- அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவாலங்காடு கிராமம்.
இங்கு தேரடி, பி.டி.ஓ., அலுவலகம், சர்க்கரை ஆலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஒட்டி பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக தினமும் 50,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருத்தணி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில் போக்குவரத்து நிறைந்த சாலையில் பேனர் வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தற்போது வைத்துள்ள பேனரை அகற்றவும், மீண்டும் இந்த சாலையையொட்டி பேனர் வைக்காத வண்ணம், திருவாலங்காடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.