/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடை இருக்கு... இருக்கைகள் எங்கே?
/
நிழற்குடை இருக்கு... இருக்கைகள் எங்கே?
ADDED : நவ 03, 2024 01:54 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே அயநல்லுார் கிராமத்தில் உள்ள மூன்று சாலை சந்திப்பில் பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்று உள்ளது. ஏனாதிமேல்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய மூன்று மார்க்கமாக செல்வோர், இந்த நிழற்குடையில் காத்திருந்து பேருந்து பிடித்து செல்வது வழக்கம்.
இந்த நிழற்குடையில் இருந்த கான்கிரீட் இருக்கைகள், சில ஆண்டுகளுக்கு முன் மாயமானது. அதன்பின், இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், கால்கடுக்க நின்றபடி காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, உடனடியாக நிழற்குடையில் இருக்கைகள் அமைக்க, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.