/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொட்டி இருக்கு... குடிநீர் எங்கே? கோடையில் கால்நடைகள் தவிப்பு
/
தொட்டி இருக்கு... குடிநீர் எங்கே? கோடையில் கால்நடைகள் தவிப்பு
தொட்டி இருக்கு... குடிநீர் எங்கே? கோடையில் கால்நடைகள் தவிப்பு
தொட்டி இருக்கு... குடிநீர் எங்கே? கோடையில் கால்நடைகள் தவிப்பு
ADDED : மார் 17, 2025 01:31 AM

பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவதானம், வெள்ளக்குளம், மனோபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கால்நடைகளின் தாகம் தீர்ப்பதற்காக, நீர்நிலைகள் இல்லாத பகுதிகளில் ஆங்காங்கே சிறு தொட்டிகள் கட்டப்பட்டு, அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டன.
இது மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது, இந்த திட்டம் சரிவர செயல்பாடு இன்றி கிடக்கிறது. தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்தும், காலியாகவும், பாசி படிந்தும் கிடக்கின்றன.
கோடைக்காலம் துவங்கிய நிலையில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று, தாகத்திற்காக தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றன.
இதுகுறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:
வெயிலின் தாக்கத்தால் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளுக்கு அடிக்கடி தண்ணீர் தேவை உள்ளது. இவற்றிற்காக கட்டப்பட்ட தொட்டிகள் முறையான பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. கண்துடைப்பிற்காக ஆங்காங்கே கட்டப்பட்டு, அதில் தண்ணீர் தேக்கி, தொடர்ந்து கண்காணிக்கப்படாமல் உள்ளன.
அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் வாயிலாக, கோடைக்காலம் முடியும் வரை தொட்டிகளை உரிய முறையில் பராமரித்து, எப்போதும் தண்ணீர் நிரப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.