/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை
/
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை
ADDED : மார் 21, 2025 11:50 PM

திருவள்ளூர், திருவள்ளூர் ராஜாஜி சாலையில், திரு.வி.க., பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருத்தணி, செங்குன்றம், பூந்தமல்லி, ஆவடி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி ஏராளமான பயணியர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, காலை - மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பணிக்கு செல்வோர் என, பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் பயணியர் வசதிக்காக, நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால், பயணியர் கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏழை, எளிய மக்களால், பணம் கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கி பயன்படுத்த முடியாமல், தாகத்துடன் வீடு திரும்புகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 'சமூக விரோதிகள் சிலர், குடிநீர் தொட்டியில் உள்ள குழாயை உடைத்து விடுகின்றனர். அதனால், தண்ணீர் நிரப்பினாலும், தொட்டியில் இருந்து தண்ணீர் வழிந்தோடி வீணாகுகிறது' என்றனர்.
எனவே, ஏழை, எளிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு, நகராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டியில் தினமும் தண்ணீரை நிரப்பி, முறையாக கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.