/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'டிசி' தர ரூ.6 லட்சம் கேட்கிறாங்க... பள்ளி மீது தாய் ஜமாபந்தியில் புகார்
/
'டிசி' தர ரூ.6 லட்சம் கேட்கிறாங்க... பள்ளி மீது தாய் ஜமாபந்தியில் புகார்
'டிசி' தர ரூ.6 லட்சம் கேட்கிறாங்க... பள்ளி மீது தாய் ஜமாபந்தியில் புகார்
'டிசி' தர ரூ.6 லட்சம் கேட்கிறாங்க... பள்ளி மீது தாய் ஜமாபந்தியில் புகார்
ADDED : மே 20, 2025 10:03 PM
திருத்தணி:திருத்தணி தாலுகா அலுவலகத்தில், நடப்பாண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடராமன் தலைமையில் நடந்தது. தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று, மக்களிடம் மனுக்கள் பெற்றனர். முதல் நாளில், 99 மனுக்கள் பெறப்பட்டன.
இதில், சோளிங்கரை சேர்ந்த ஜமுனா அளித்த மனு:
எனக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூவரும், ஆர்.கே.பேட்டை, சமத்துவபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
என் கணவர் நான்கு ஆண்டுகளுக்கு முன், கொரோனா பாதிப்பால் இறந்து விட்டார். குழந்தைகளை படிக்க வைக்க மிகவும் சிரமப்பட்டேன்.
இதுதொடர்பாக, அருட்சாய் வெற்றி வித்யாலயா பள்ளியின் அப்போதைய முதல்வரிடம் முறையிட்டோம்.
'தந்தையை இழந்த குழந்தைகள் என்பதால், உங்களின் மூன்று குழந்தைகளுக்கும், எங்கள் பள்ளியில் இலவச கல்வி வழங்குகிறோம்' எனக் கூறினார். இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு முன், பள்ளி முதல்வர் மாறிவிட்டார்.
தற்போது, மூத்த மகள் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். கல்லுாரி சேர்க்கைக்காக மாற்றுச்சான்றிதழ் கோரி பள்ளிக்கு சென்றேன். மூன்று முறை சென்றும், 'டிசி' தரவில்லை..
தற்போதைய முதல்வர், 'உங்கள் மூன்று குழந்தைகளின் கல்விக் கட்டணம், ஆறு லட்சத்து, 2,200 ரூபாய் பாக்கி தொகை உள்ளது. பணத்தை கட்டினால்தான் சான்றிதழ் வழங்க முடியும்' என்றார்.
எனவே, என் மகள்கள் மற்றும் மகனின் கல்வி சான்றிதழ்கள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி கூறியதாவது:
மாணவியின் மாற்று சான்றிதழை வழங்க கோரியும், இரண்டாவது மகள் மற்றும் மகனின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும்படியும், மாவட்ட கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்வி அலுவலரை மொபைல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். நல்ல தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சியில், தாசில்தார் ராஜேஷ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தலைமையில் நடந்தது.
இதில், பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை, குடும்ப அட்டை உள்ளிட்டவை குறித்து, 116 மனுக்கள் பெறப்பட்டன.