/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடுகளில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினார்
/
வீடுகளில் தொடர் கைவரிசை 'பலே' திருடன் சிக்கினார்
ADDED : செப் 08, 2025 11:37 PM

ஆவடி, ஆவடி பகுதியில், அதிகாலையில் வீடுகளில் புகுந்து மொபைல் போன்கள் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆவடி அடுத்த பாலவேடு, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் கவிகுமார், 30. நேற்று அதிகாலை வீட்டில் துாங்கி கொண்டிருந்த இவர், சத்தம் கேட்டு எழுந்துள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடியுள்ளார். வீட்டில் இருந்த மொபைல் போனும் திருட்டு போயிருந்தது.
ஆவடி முத்தா புதுப்பேட்டை போலீசாரின் விசாரணையில், பாலவேடு பகுதியில் உள்ளாடை மட்டுமே அணிந்த மர்ம நபர், ஐந்து வீடுகளில் புகுந்து மொபைல் போன்கள் திருடியது தெரிந்தது. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாலவேடு வெளிவட்ட சாலையோர பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் பதுங்கி இருந்த நபரிடம் விசாரிக்க முயன்றபோது தப்பியோட முயன்றார். போலீசார் துாரத்தி சென்று பிடித்தனர்.
விசாரணையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த பி.இ., பட்டதாரி அருண் பிரசாத், 30, என தெரிந்தது. வெங்கல் பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தில் வார்டனாக பணிபுரிந்த இவர், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ஆவடி, அம்பத்துார் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ஐந்து மொபைல் போன்கள், 3 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டன.