ADDED : நவ 12, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: புழல், டாக்டர் அம்பேத்கர் தெருவில், செயின்ட் பால் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. வழக்கம்போல, நேற்று காலை பள்ளி அலுவலக கதவை திறக்க சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
தகவலறிந்து பள்ளிக்கு வந்த நிர்வாகிகள், பீரோவை ஆய்வு செய்தபோது, 51,000 ரூபாய், மடிக்கணினி மற்றும் இரண்டு மொபைல் போன்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து, புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பள்ளியில் கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.