/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலைமையாசிரியரை மாற்றக்கோரி திருக்கண்டலம் மாணவர்கள் போராட்டம்
/
தலைமையாசிரியரை மாற்றக்கோரி திருக்கண்டலம் மாணவர்கள் போராட்டம்
தலைமையாசிரியரை மாற்றக்கோரி திருக்கண்டலம் மாணவர்கள் போராட்டம்
தலைமையாசிரியரை மாற்றக்கோரி திருக்கண்டலம் மாணவர்கள் போராட்டம்
ADDED : டிச 10, 2024 12:56 AM

ஊத்துக்கோட்டை,பெரியபாளையம் அருகே, திருக்கண்டலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை 397 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, பத்தாம் வகுப்பில், 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஷாமிலி, 55, என்பவர், மாணவர்களிடம், தாமதமாக பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
அரையாண்டு தேர்வுக்காக சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10ம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாக கூறி, மாணவர்கள் நேற்று காலை, தலைமை ஆசிரியரை மாற்றக்கோரி திடீரென பள்ளி மாணவர்கள் பள்ளி முன்பாக அமர்ந்து கோஷமிட்டனர். தகவலறிந்த ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாந்தி மற்றும் பொன்னேரி கல்வி அதிகாரி நவீன் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தினர். பின் மாணவர்களிடம் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதைஅடுத்து, மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.