/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சமுதாய கூடம் இல்லாமல் திருப்பந்தியர் மக்கள் அவதி
/
சமுதாய கூடம் இல்லாமல் திருப்பந்தியர் மக்கள் அவதி
ADDED : மே 14, 2025 06:20 PM
திருப்பந்தியூர்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பண்ணுார், சூசைபுரம், திருப்பந்தியூர் உள்ளிட்ட கிராமங்களில் 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, சமுதாய கூடம் இல்லாததால், பகுதிவாசிகள் அருகில் உள்ள சுங்குவார்சத்திரம், மப்பேடு ஆகிய கிராமங்களில் உள்ள தனியார் மண்டபத்தை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பகுதிவாசிகளுக்கு பணச் செலவு அதிகரிப்பதோடு, நேரமும் விரயமாகிறது. இந்நிலையில், பொதுமக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டங்களில் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சியில் சமுதாய கூடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, திருப்பந்தியர் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.