sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி- சித்துார் மார்க்கம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம்! முதற்கட்டமாக ரூ. 61 கோடியில் பணிகள் துவக்கம்

/

திருத்தணி- சித்துார் மார்க்கம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம்! முதற்கட்டமாக ரூ. 61 கோடியில் பணிகள் துவக்கம்

திருத்தணி- சித்துார் மார்க்கம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம்! முதற்கட்டமாக ரூ. 61 கோடியில் பணிகள் துவக்கம்

திருத்தணி- சித்துார் மார்க்கம் நான்கு வழி சாலையாக விரிவாக்கம்! முதற்கட்டமாக ரூ. 61 கோடியில் பணிகள் துவக்கம்

1


UPDATED : ஜன 30, 2025 07:52 AM

ADDED : ஜன 29, 2025 08:35 PM

Google News

UPDATED : ஜன 30, 2025 07:52 AM ADDED : ஜன 29, 2025 08:35 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.கே. பேட்டை:திருத்தணி - -சித்துார் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தடுப்பதற்கு நெடுஞ்சாலை துறையினர் இரு வழிச்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு, 140 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்துள்ளனர். முதற்கட்டமாக, 10 கி.மீ., துாரம் மட்டும் நான்கு வழிச்சாலை ஏற்படுத்தும் பணிகள், 61 கோடி ரூபாயில் துவங்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முதல் ஆந்திர மாநிலம், சித்துார் வரை, 65 கி.மீ. துாரம் இருவழி மாநில நெடுஞ்சாலையாக உள்ளது. இதில் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள், 40 கிலோ மீட்டர் துாரம் வருகிறது. மீதமுள்ள 25 கி.மீ., துாரம் ராணிப்பேட்டை மாவட்டம் எல்லைக்குள் வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி முதல் ஆர்.கே.பேட்டை வரை, 23 கி.மீட்டரும், ஆர்.கே.பேட்டை முதல் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையான விடியங்காடு வரை, 17 கி மீட்டர் துாரம் உள்ளது. இந்த, 40 கி.மீ., துாரம் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருத்தணி-- சித்துார் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். குறிப்பாக நுாற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் ஆந்திர மாநிலம், பலமநேர், கார்வேட்நகரம், சித்துார் ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறி லாரி, வேன்களும் அதிகளவில் திருத்தணி நகருக்கு தினசரி வருவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இது தவிர மாநில நெடுஞ்சாலையோரம் சிலர் ஆக்கிரமித்து கட்டடங்கள் மற்றும் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் சாலையும் குறுகலாக மாறிவருகிறது. இதனால் விபத்துக்களும் தினமும் அதிகரித்து வருகிறது.

விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் தவிர்ப்பதற்கு இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு திருத்தணி, பள்ளிப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் தீர்மானித்து, 140 கோடி ரூபாய் திட்டமதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் முதற்கட்டமாக திருத்தணி ஒன்றியத்தில், தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, 22 கோடி ரூபாயும், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் விடியங்காடு, அசுவரேவந்தபுரம் முதல் கோபாலபுரம் வரை, 6 கி.மீ. துாரத்திற்கு, 39 கோடி ரூபாயும், என மொத்தம், 10 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, 61 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.

தலையாறிதாங்கல்- பீரகுப்பம் வரை சாலை விரிவாக்க பணிகள் கடந்த மாதமும், விடியங்காடு அசுவரேந்தபுரம்- கோபாலபுரம் சாலை விரிவாக்க பணிகள் கடந்த வாரம் துவங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் முதற்கட்டமாக, 10 கி.மீ.,துாரம் வரை இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு பணிகள் துவங்கி உள்ளன.

இதற்காக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போல் சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றுவது மற்றும் மண்சாலை அமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. மண்சாலை ஏற்படுத்தியவுடன் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் மற்றும் சிறுபாலங்கள் கட்டும் பணிகளும் துவங்கும். இப்பணிகள், ஒரு வருடத்திற்குள் முடித்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us