/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாநில அளவில் 3ம் இடம் பிடித்த திருத்தணி காவல் நிலையம்
/
மாநில அளவில் 3ம் இடம் பிடித்த திருத்தணி காவல் நிலையம்
மாநில அளவில் 3ம் இடம் பிடித்த திருத்தணி காவல் நிலையம்
மாநில அளவில் 3ம் இடம் பிடித்த திருத்தணி காவல் நிலையம்
ADDED : ஜன 15, 2025 11:49 PM

திருத்தணி,தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த 3 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, குடியரசு தினத்தன்று 'தமிழக முதல்வர் கோப்பை' வழங்கப்படும்.
இதற்காக காவல் துறை அதிகாரிகள் அடங்கிய தனிக்குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுவினர் மாநிலம் முழுதும் உள்ள காவல் நிலையங்களை ஆய்வு செய்வார்கள்.
இந்நிலையில், 2023ம் ஆண்டின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, 2023ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் முதலிடத்தை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை திருப்பூர் வடக்கு காவல் நிலையம், மூன்றாமிடத்தை திருத்தணி காவல் நிலையம் ஆகியவை பிடித்துள்ளன.
மேலும், 38 காவல் மாவட்டங்களில் உள்ள 1,405 காவல் நிலையங்களில் திருத்தணி காவல் நிலையம் முதலிடம் பெற்றுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட 3 காவல் நிலையங்களுக்கு 'முதல்வர் கோப்பையை' குடியரசு தினத்தன்று தமிழக முதல்வர் வழங்க உள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.