sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி சார்- பதிவாளர் அலுவலகம் திறப்பு

/

திருத்தணி சார்- பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருத்தணி சார்- பதிவாளர் அலுவலகம் திறப்பு

திருத்தணி சார்- பதிவாளர் அலுவலகம் திறப்பு


ADDED : நவ 26, 2024 08:10 PM

Google News

ADDED : நவ 26, 2024 08:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த சார்-பதிவாளர் அலுவலக கட்டடம் பழுதடைந்ததால் கடந்த, 14 மாதங்களுக்கு முன் கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

தொடர்ந்து அங்கு, 1,624 சதுரடியில் தரை தளம் மற்றும் முதல் தளம் கூடிய, 1.63 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சார்-பதிவாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து திருத்தணியில் நடந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையின் நலத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதிபூபதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சியில், துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன், செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை தேவன், மாவட்ட பதிவாளர் பாவேந்தன், திருத்தணி சார்- பதிவாளர் சுகன்யா, திருத்தணி தாசில்தார் மலர்விழி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us