/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் ரூ.2.20 கோடி வசூல்
/
திருத்தணி கோவிலில் ரூ.2.20 கோடி வசூல்
ADDED : ஜூலை 01, 2025 09:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:முருகன் கோவில் உண்டியலில், 2.20 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவை காணிக்கையாக உண்டியல்களில் செலுத்துகின்றனர்.
கடந்த 38 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, நேற்று முன்தினம் கோவில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில், கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 2 கோடியே, 20 லட்சத்து, 10,874 ரூபாய், 1,030 கிராம் தங்கம், 15,405 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.