/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் சாம்பியன்
/
திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் சாம்பியன்
ADDED : டிச 09, 2024 02:11 AM

திருத்தணி:ஆர்.கே.பேட்டை அக் ஷயா மெட்ரிக் பள்ளியில், சாம்பியன் ஸ்போர்ட்ஸ் அகாடெமி, யூத் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் டெவெலப்மென்ட் அசோஷியேசன் வாயிலாக வருவாய் கோட்ட அளவிலான பள்ளிகளுக்கான மாநில அளவிலான போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது.
ஓட்டப்பந்தயம், ஈட்டி, குண்டு மற்றும் வட்டு எறிதல், கைப்பந்து, கால்பந்து உட்பட 10க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்தன. இதில், 30 பள்ளிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கு பெற்றனர்.
இந்த போட்டிகளில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திருத்தணி தளபதி பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர். வெற்றி மாணவர்களை தளபதி பள்ளி தாளாளர் எஸ்.பாலாஜி, முதல்வர் விநாயகம் ஆகியோர் வாழ்த்தினர். போட்டிகளை உடற்கல்வி இயக்குனர் சீனிவாசன் மற்றும் பள்ளிகளின் விளையாட்டு ஆசிரியர்கள் ஒருங்கிணைந்தனர்.
வருவாய் கோட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.