/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி - திருச்செந்துார் பேருந்து சேவை துவக்கம்
/
திருத்தணி - திருச்செந்துார் பேருந்து சேவை துவக்கம்
திருத்தணி - திருச்செந்துார் பேருந்து சேவை துவக்கம்
திருத்தணி - திருச்செந்துார் பேருந்து சேவை துவக்கம்
ADDED : ஏப் 05, 2025 10:26 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நெல்லை, துாத்துக்குடி, திருச்செந்துார் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிவாசிகள் அதிகளவில் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள், விழா நாட்களில் திருத்தணியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டியிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக, திருத்தணியில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும் என, அரசுக்கும், துறை அமைச்சர் மற்றும் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோரிடம் வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் பயனாக, திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை, துாத்துக்குடி வழியாக திருச்செந்துாருக்கு நேரடி பேருந்து சேவை துவக்க விழா நடந்தது.
இதில், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று, மாலை 6:00 மணிக்கு பேருந்தில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் நகர வியாபாரிகள் பங்கேற்றனர்.