/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4 ஆண்டாக ஜெனரேட்டர் வசதியில்லாத திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையம்
/
4 ஆண்டாக ஜெனரேட்டர் வசதியில்லாத திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையம்
4 ஆண்டாக ஜெனரேட்டர் வசதியில்லாத திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையம்
4 ஆண்டாக ஜெனரேட்டர் வசதியில்லாத திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலையம்
ADDED : மே 31, 2025 11:23 PM
திருவாலங்காடு திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், 50 ஆண்டுகளாக ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வந்தது. கடந்த 2021ம் ஆண்டு, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது.
பழைய பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், 1.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டடப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது. இங்கு திருவாலங்காடு, மணவூர், சின்னம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
தவிர, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏராளமான கர்ப்பிணியர் மருத்துவ பரிசோதனைக்காக வருகின்றனர். தற்போது, ஆப்பரேஷன் தியேட்டர் துவங்கி செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி இல்லை.
பராமரிப்பு பணி மற்றும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் நோயாளிகள், கர்ப்பிணியர் உள்ளிட்டோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நான்கு ஆண்டுகளாக இதே நிலை தொடர்வதால், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.