/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீணாகும் சிறுமின் விசை குடிநீர் தொட்டிகள்சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
வீணாகும் சிறுமின் விசை குடிநீர் தொட்டிகள்சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
வீணாகும் சிறுமின் விசை குடிநீர் தொட்டிகள்சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
வீணாகும் சிறுமின் விசை குடிநீர் தொட்டிகள்சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : ஏப் 06, 2024 12:50 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், தலா 1 லட்சம் மதிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன், 526 ஊராட்சிகளிலும் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுடன் கூடிய சிறு மின்விசை குடிநீர் தொட்டிகள் பயன்பாடில்லாமல் வீணாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், கடந்த 2014 - 15ம் ஆண்டு 'தாய்' திட்டத்தின் கீழ் ஆண்டுகளுக்கு முன், தலா 1.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறுடன் கூடிய 1,100க்கும் மேற்பட்ட சிறுமின்விசை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்த குடிநீர் தொட்டிகளை பகுதிவாசிகள் தங்கள் குடிநீர் தேவை உட்பட பிற பணிகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது 99 சதவீதம் குடிநீர் தொட்டிகள் பயன்பாடில்லாமல் குப்பை கொட்டும் இடமாகவும், காட்சி பொருளாகவும் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவும் மாறியுள்ளது.
இதற்கு, ஆழ்துளை கிணறுகளில் நீர் இல்லாததால் குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு இல்லை என பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆழ்துளை கிணறுகளை முறையாக ஆய்வு செய்யாமல் அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
திட்டம் துவங்கப்பட்ட 10 ஆண்டுகளில் அரசு பணம் வீணாகியுள்ளதாகவும் அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து சிறு மின்விசை குடிநீர் தொட்டிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தையும் ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், தற்போது ஊராட்சி பகுதியில் தலா 8 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையமும் வீணாகி வருகிறது.

