/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரும்பு கடத்தினால் நடவடிக்கை திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
/
கரும்பு கடத்தினால் நடவடிக்கை திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
கரும்பு கடத்தினால் நடவடிக்கை திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
கரும்பு கடத்தினால் நடவடிக்கை திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : செப் 20, 2025 09:42 PM
திருவள்ளூர்:''திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கடத்திச் சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரும்பு கடத்தலை தடுப்பது தொடர்பான கண்காணிப்பு குழுவின் கூட்டம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் வேலுார் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களிலிருந்து, இடைத்தரகர்கள் வாயிலாக, தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள சில தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு கடத்தப்படுகிறது.
இச்செயலானது, சர்க்கரைத்துறை ஆணையரின் செயல்முறை ஆணையின்படியும், கரும்பு கட்டுப்பாட்டு ஆணை மற்றும் கரும்பு கட்டுப்பாட்டு சட்டம், 1966க்கு எதிரானது.
எனவே, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வேலுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து, கரும்புகள் கொண்டு செல்வதை, தனியார் சர்க்கரை ஆலைகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறினால், வருவாய் வசூல் செய்யும் பிரிவின் கீழ், கரும்பு கடத்தலில் ஈடுபடும் லாரி மற்றும் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும்; இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
உரிய ஆவணங்கள் இல்லாமல், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கரும்பு எடுத்து சென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு கடத்தலில் ஈடுபடும் தனியார் சர்க்கரை ஆலைகள் மீதும் சட்ட நடவடிக்கை பாயும்.
இவ்வாறு அவர் பேசினார்.