/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் :புகார் பெட்டி:மழைநீர் வடிகால்வாய் அமைக்க எதிர்பார்ப்பு
/
திருவள்ளூர் :புகார் பெட்டி:மழைநீர் வடிகால்வாய் அமைக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் :புகார் பெட்டி:மழைநீர் வடிகால்வாய் அமைக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர் :புகார் பெட்டி:மழைநீர் வடிகால்வாய் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 01, 2024 12:27 AM

மழைநீர் வடிகால்வாய் அமைக்க எதிர்பார்ப்பு
திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 1,000த்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அரசு மருத்துவமனையின் நுழைவாயிலில் மழைநீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் சிரமப்படுகின்றனர்.
பலத்த மழை பெய்யும் போது, மருத்துவமனை நுழைவாயிலில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுவதால், நடந்து செல்லும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
எனவே, அரசு மருத்துவமனை முன், மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எ..வேலு, திருத்தணி
தேரடி அருகேகுப்பை குவியல் ; ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்
திருவாலங்காடு ஊராட்சியில் உள்ள சன்னிதி தெருவில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தேரடி அருகே குப்பை கொட்டுவதற்காக தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி தினமும் நிரம்பும் நிலையில், குப்பை கழிவுகளை அகற்றாமல், ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இதனால், தொட்டியில் இருந்து குப்பை நிரம்பி வழிவதுடன், அப்பகுதியில் சிதறி துர்நாற்றம் வீசி வருகிறது.இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.பூபாலன், திருவாலங்காடு.