/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்:புகார் பெட்டி: சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
/
திருவள்ளூர்:புகார் பெட்டி: சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூர்:புகார் பெட்டி: சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
திருவள்ளூர்:புகார் பெட்டி: சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஜன 18, 2024 01:26 AM

சேதமடைந்த மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை
திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் அடுத்துள்ளது, காஞ்சிப்பாடி ஊராட்சி. இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.
இந்த டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் இரண்டு மின்கம்பங்களும் கான்கிரீட்டுகள் சேதமடைந்து, விரிசல் அடைந்து காணப்படுகின்றன.இந்த மின்கம்பம் விழுந்தால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், விவசாயிகள் மின் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ச.வி.புகழ்வேந்தன்,
திருவாலங்காடு.
இணைப்பு சாலைதிறந்தும் பயனில்லை
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் சந்திப்பில், ஆந்திர மாநிலம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று சென்றன. அப்பகுதியில் இணைப்பு சாலை அடைக்கப்பட்டதால், பேருந்துகள் மேம்பாலங்கள் மீது செல்கின்றன. இதனால், பேருந்து பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இணைப்பு சாலையை மீண்டும் திறந்து விடும்படி கோரிக்கை எழுந்தது. அதன்படி, தற்போது இணைப்பு சாலை திறந்திருந்தும், பெரும்பாலான பேருந்துகள் மேம்பாலம் மீதே செல்கின்றன.
எனவே, அனைத்து பேருந்துகளையும், பெத்திக்குப்பம் சந்திப்பு அமைந்துள்ள இணைப்பு சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ஜெகதீஷ்,
கும்மிடிப்பூண்டி.
ஏ.டி.எம்., மையம் கோளூரில் அமையுமா?
பொன்னேரி அடுத்த கோளூர் கிராமத்தை சுற்றி பனப்பாக்கம், இலுப்பாக்கம், புதுச்சேரிமேடு, அண்ணாமலைச்சேரி, எடகுப்பம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், 1000 நாள் பணியாளர்கள், முதியோர் மற்றும் அரசின் உதவித்தொகைகளை பெறுவோர், தங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, 4 -7 கி.மீ., தொலைவில் உள்ள மெதுார் பகுதிக்கு செல்ல வேண்டும். எனவே, கோளுரில் ஏ.டி.எம்., மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிவகுருநாதன், கோளூர்.