/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;ரூ.10.75 கோடியில் மாற்றுப்பாதை பணி துவக்கம்
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;ரூ.10.75 கோடியில் மாற்றுப்பாதை பணி துவக்கம்
திருவள்ளூர்:புகார் பெட்டி;ரூ.10.75 கோடியில் மாற்றுப்பாதை பணி துவக்கம்
திருவள்ளூர்:புகார் பெட்டி;ரூ.10.75 கோடியில் மாற்றுப்பாதை பணி துவக்கம்
ADDED : செப் 05, 2024 12:59 AM

பழுதடைந்த நுாலக கட்டடம் 1,000 புத்தகங்கள் வீணாகும் அவலம்
திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில், 2007- - 08ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், பொது நுாலக கட்டடம் அமைக்கப்பட்டு, 1,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் ஊராட்சி மூலம் வழங்கி, வாசகர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இந்நிலையில், நுாலக கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், கட்டடம் பழுதடைந்து உள்ளது. மேலும், நுாலகம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால், புத்தகங்கள் வீணாகி வருவதோடு, வாசகர்கள் நுாலகத்திற்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த நூலக கட்டடத்தை சீரமைத்து, மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சேகர், கிருஷ்ணசமுத்திரம்.
கால்நடை கிளை மருத்துவமனை திருவாலங்காடில் அமைக்கப்படுமா?
திருவாலங்காடை சுற்றி கூடல்வாடி, வீரராகவபுரம், புளியங்குண்டா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர்.
இவர்கள், தங்களது வாழ்வாதாரத்துக்கு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, 3 - 8 கி.மீ.,யில் உள்ள கணேசபுரம் கால்நடை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளின் கால நேரம் விரயமாகி வருவதுடன் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே, திருவாலங்காடில் செயல்பட்டு வந்த கால்நடை கிளை மருத்துவமனையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.முத்தமிழ் செல்வன், திருவாலங்காடு.
பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் அச்சம்
திருத்தணி ஒன்றியம் வி.கே.ஆர்.புரம் ஊராட்சி, பொந்தாலகண்டிகை கிராமத்தில், பழுதடைந்த குடிநீர் தொட்டியின் மூலம், சில ஆண்டுகளாக தெருக்குழாய் மற்றும் வீட்டு குழாய்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொட்டியின் மேற்பகுதி முழுதும் சேதமடைந்துள்ளதால், குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதை தொடர்ந்து, பழுதடைந்த தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை தொட்டி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை.எனவே, பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சந்திரன்,
பொந்தாலகண்டிகை, திருத்தணி.
நீர்வரத்து கால்வாய் சீரமைக்க கோரிக்கை
திருத்தணி ஒன்றியம் தலையாறிதாங்கல் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய், முறையாக நீர்வளத் துறையினர் பராமரிக்காததால் மாயமாகி வருகிறது. மேலும் நீர்வரத்து கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், சில ஆண்டுகளாக பருவ மழை பெய்தும், தண்ணீர் வரத்து இல்லாமல், வறண்டு காணப்படுகிறது. நிதி பற்றாக்குறையால் கால்வாய் பணிகள் செய்ய முடியவில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே, கலெக்டர் நடவடிக்கை எடுத்து, நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, தலையாறிதாங்கல் ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
- எஸ்.பாலாஜி, தலையாறிதாங்கல்.