/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்:புகார் பெட்டி;திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?

ADDED : பிப் 15, 2024 01:49 AM

திருத்தணி கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமையுமா?
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து, கோவிலில் நடைபெறும் சேவை மற்றும் அபிஷேகத்திற்கு, மலைக்கோவிலில் உள்ள கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து டிக்கெட் பெறுகின்றனர். ஆனால், பக்தர்கள் பணமாக கொண்டு சென்றால் தான் முன்பதிவு செய்ய முடியும்.
ஏனெனில், 'ஜிபே, போன்பே, பேடிஎம்' போன்ற வசதிகள் கோவிலில் இல்லை. இதனால், பக்தர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் செலுத்த முடியவில்லை.
மேலும், 3 கி.மீ., துாரம் உள்ள திருத்தணி பஜாருக்கு வந்து, பணம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, முருகன் மலைக்கோவிலில் ஏ.டி.எம்., மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.ராஜேஷ், திருத்தணி.