/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மாவட்ட கராத்தே கும்மிடிப்பூண்டி அணி 'சாம்பியன்'
/
திருவள்ளூர் மாவட்ட கராத்தே கும்மிடிப்பூண்டி அணி 'சாம்பியன்'
திருவள்ளூர் மாவட்ட கராத்தே கும்மிடிப்பூண்டி அணி 'சாம்பியன்'
திருவள்ளூர் மாவட்ட கராத்தே கும்மிடிப்பூண்டி அணி 'சாம்பியன்'
ADDED : செப் 08, 2025 11:38 PM

சென்னை, திருவள்ளூர் மாவட்ட அளவிலான கராத்தே போ ட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, கு ம்மிடிப்பூண்டி அணியினர் கைப்பற்றினர்.
திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில், 28ம் ஆண்டு மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, பொன்னேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.
மாவட்டத்திற்கு உட்பட பல்வேறு பள்ளிகள் மற்றும் அகாடமியை சேர்ந்த, 500 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர். இதில், 7 வயது முதல் 18 வயதுடைய சிறுவர், சிறுமியருக்கு, 'கட்டா, குமிட்' ஆகிய சண்டை பிரிவுகளில், பல்வேறு எடை வகையில், மொத்தம் 72 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
அனைத்து வகையாக போட்டிகள் முடிவில், கும்மிடிப்பூண்டி அணியினர், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
அவர்களை தொடர்ந்து, வேப்பம்பட்டு மற்றும் திருநின்றவூர் அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றின.