/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
/
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : அக் 09, 2011 12:30 AM
திருத்தணி : புரட்டாசி, 3வது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் நடந்தது.
திருத்தணி வைகுண்ட பெருமாள் கோவில், விஜயலட்சுமி தாயார் கோவில், நெமிலி வைகுந்த பெருமாள் கோவில், சந்தான வேணுகோபாலபுரம் வேணுகோபாலசாமி கோவில், அருங்குளம் பெருமாள் கோவில், திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று காலை 10 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரம், தீபாராதனை நடந்தன. விஜயராகவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் உற்சவர் திருவீதி உலா நடந்தது.

