/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் திருத்தணி சி.சி ., அணி வெற்றி
/
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் திருத்தணி சி.சி ., அணி வெற்றி
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் திருத்தணி சி.சி ., அணி வெற்றி
திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் திருத்தணி சி.சி ., அணி வெற்றி
ADDED : நவ 18, 2025 03:34 AM
சென்னை: திருவள்ளூர் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், திருத்தணி சி.சி., அணி, 48 ரன்கள் வித்தியாசத்தில், ஹிந்து கல்லுாரி அணியை தோற்கடித்தது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டிவிஷன் லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நான்காவது டிவிஷன் ஏ பிரிவு போட்டி, நேற்று முன்தினம் பட்டாபிராம் ஹிந்து கல்லுாரி வளாகத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த திருத்தணி சி.சி., அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 176 ரன்கள் அடித்தது. அணியின் வீரர் அருள்பாண்டியன், 83 ரன்களை அடித்தார்.
அடுத்து களம் இறங்கிய இந்து கல்லுாரி அணி, 27.2 ஓவர்களில், 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில், திருத்தணி சி.சி., அணி வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், எஸ்.எஸ்., - சி.ஏ., அணி, 30 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு, 169 ரன்கள் அடித்தது. எதிர்த்து விளையாடிய ஜெயா கல்வி குழுமம், 23.1 ஓவர்களில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 174 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
ஜெயா கல்வி குழும அணியின் வீரர் ஸ்ரீதரன், 64 பந்துகளில் 13 சிக்சர், 6 பவுண்டரி என, 118 ரன்கள் அடித்து, வெற்றிக்கு கைகொடுத்தார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

