/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் 10க்கு 9 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் ஏக்கம்
/
திருவள்ளூரில் 10க்கு 9 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் ஏக்கம்
திருவள்ளூரில் 10க்கு 9 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் ஏக்கம்
திருவள்ளூரில் 10க்கு 9 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாததால் ஏக்கம்
ADDED : ஜன 31, 2024 11:48 PM
திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2011 சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.
தி.மு.க.,வில் திருவள்ளூர் - ராஜேந்திரன்; திருத்தணி - சந்திரன்; கும்மிடிப்பூண்டி - கோவிந்தராஜன்; ஆவடி - நாசர்; பூந்தமல்லி - கிருஷ்ணசாமி; அம்பத்துார் - ஜோசப் சாமுவேல்; மாதவரம் - சுதர்சனம்; மதுரவாயல் - கணபதி; திருவொற்றியூர் - சங்கர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பொன்னேரியில் கூட்டணி கட்சியான, காங்., வெற்றி பெற்று, துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஆனார்.
இதில், ஆவடி எம்.எல்.ஏ., நாசர் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை மதிக்காததாலும், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் கட்சியில், அவரது மகனின் குறுக்கீடு காரணமாகவும், அமைச்சர் பதவியில் இருந்து, நாசர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையடுத்து, திருத்தணி சந்திரன், திருவள்ளூர் ராஜேந்திரன், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, மாதவரம் சுதர்சனம் ஆகியோரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், யாருக்கும் அமைச்சர் பதவி அளிக்காத கட்சி தலைமை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கைத்தறி துறை அமைச்சர் காந்தியை, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமித்தது.
அவரும், ராணிப்பேட்டையில் இருந்து அவ்வப்போது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்து, கட்சி பணியாற்றி வருகிறார்.
இருப்பினும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள், அவரை எளிதில் சந்திக்க முடியாமலும், இதற்காக ராணிப்பேட்டைக்கும் செல்ல வேண்டியுள்ளதால் அதிருப்தியில் உள்ளனர்.
தேர்தலுக்கு முன்னராவது, திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பில் உள்ளனர்.