தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருவள்ளூர் 'விஷன் - 2030' திட்ட மலர் வெளியீடு

 திருவள்ளூர் 'விஷன் - 2030' திட்ட மலர் வெளியீடு

 திருவள்ளூர் 'விஷன் - 2030' திட்ட மலர் வெளியீடு


ADDED : மார் 07, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், 'விஷன் - 2030' மற்றும் ஐந்து ஆண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது.

சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'உங்கள் கனவ சொல்லுங்கள்' திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியான, 'கனவுகள் மெய்ப்படும்' என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. அதில், அமைச்சர் நாசர் பங்கேற்றார். பின், திருவள்ளூர் 'விஷன் - 2030' மற்றும் மாவட்ட ஐந்தாண்டு சாதனை மலர்களை, அமைச்சர் வெளியிட, கலெக்டர் பிரதாப் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us