/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரை பறிமுதல் திருவள்ளூர் வாலிபர் கைது
/
போதை மாத்திரை பறிமுதல் திருவள்ளூர் வாலிபர் கைது
ADDED : நவ 10, 2025 01:56 AM

திருவள்ளூர்: போதை மாத்திரை வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூரில் போதை மாத்திரை புழக்கம் அதிகரித்து வருவதாக, எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, எஸ்.பி., விவேகானந்தா சுக்லா உத்தரவின்படி, திருவள்ளூர் நகர காவல் நிலைய போலீசார், காந்தி நகரில் நேற்று முன்தினம் மாலை ரோந்து பணி ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 22, என தெரிய வந்தது.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த, 83 டைடால் என்னும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், கமலக்கண்ணனை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

