/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது
/
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது
வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது
ADDED : நவ 10, 2025 01:57 AM

திருத்தணி: வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை எடுக்க முயன்ற போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருத்தணி நகராட்சி குமரன் தெருவைச் சேர்ந்தவர் தினேஷ், 24; சூப்பர் வைசர். நேற்று, தனக்கு சொந்தமான 'பியட் பாலியோ' காரை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார்.
நேற்று மாலை 5:30 மணிக்கு, முருக்கம்பட்டைச் சேர்ந்த அஜீத்குமார், 22, என்பவர், காரை எடுக்க முயன்றார். அப்போது, பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு, காரின் இன்ஜின் தீப்பிடித்து எரிய துவங்கியது.
தகவல் அறிந்தது வந்த திருத்தணி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் முழுதும் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.