/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதையின் பிடியில் அகப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்: கலெக்டர்
/
போதையின் பிடியில் அகப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்: கலெக்டர்
போதையின் பிடியில் அகப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்: கலெக்டர்
போதையின் பிடியில் அகப்பட்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும்: கலெக்டர்
ADDED : பிப் 28, 2025 01:39 AM

திருவள்ளூர்:தமிழக முதல்வர் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழகம் முழுதும், 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மையங்களில், 15 கோடியே 81 லட்சத்து 84,500 ரூபாய் மதிப்பில் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தினை, கலெக்டர் பிரதாப் பார்வையிட்டு விபரங்களை கேட்டறிந்தார்.
பின் அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் உத்தரவுப்படி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மனநல மருத்துவ பிரிவின் கீழ் மது மற்றும் போதை மீட்பு மறுவாழ்வு மையம் - கலங்கரை, 59 லட்சத்து, 99,380 ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இம்மையத்திற்கென்று தனியாக மருத்துவ உபகரணங்கள், சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூரில் பல்வேறு சூழ்நிலை காரணமாக போதையின் பிடியில் அகப்பட்டு உள்ளவர்களை மீட்டெடுத்து உரிய சிகிச்சை அளித்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் வகையில் இம்மையம் செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் விஜயராஜ் மற்றும் மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.