/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மளிகை கடைக்காரரை வெட்டியவர்கள் கைது
/
மளிகை கடைக்காரரை வெட்டியவர்கள் கைது
ADDED : டிச 03, 2024 09:30 PM
திருத்தணி:திருத்தணி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 37. இவர், திருத்தணி, கந்தசாமி தெருவில் மளிகை கடை வைத்து உள்ளார். இவர், கடந்த, 1ம் தேதி மதியம் கடையில் இருந்த போது, திருத்தணி பகுதியைச் சேர்ந்த முகமுதுயூசப்அலி, 20, அவரது நண்பர்கள் மூன்று பேர் கத்திகளுடன் வந்து, முன்விரோதம் காரணமாக டில்லிபாபுவின் தலை மற்றும் இடது கையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த டில்லிபாபு, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில் நேற்று மாலை, திருத்தணி - அரக்கோணம் சாலையில் சென்றுக் கொண்டிருந்த முகமதுயூசப்அலி, அவரது நண்பர் 17 வயது சிறுவன், ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அப்பு, விக்கி ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.