/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
2 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தொழுதாவூர் சாலை
/
2 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தொழுதாவூர் சாலை
ADDED : டிச 13, 2024 02:38 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் கிராமத்தில், நிர்மலா நகரில், 27.27 லட்சம் ரூபாயில் ஜல்லி சாலை அமைப்பதற்கு, 2022ல், தீர்மானம் நிறைவேற்றி, பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது.
இப்பணி, 2023ம் ஆண்டு பிப்வரியில் முடிக்க மாவட்ட ஊரக வளர்ச்சி துறை காலக்கெடு வழங்கியது. சாலை, 10 அடி அகலம், ஒரு கி.மீ., துாரத்திற்கு அமைக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும், மேற்கண்ட தொகையில், 3.19 லட்சம் ரூபாயில் நுாறு நாள் தொழிலாளர்கள் கொண்டு சாலைப் பணி அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
சாலைப் பணி துவங்கி நிலையில், நுாறு நாள் தொழிலாளர்கள் கணக்கில், 2.47 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலைப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.
இரண்டு ஆகியும் சாலைப் பணிகள் அமைக்காமல் ஒன்றிய நிர்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதனால் தொழுதாவூர் மக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
எனவே, கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதுகுறித்து தொழுதாவூர் ஊராட்சி தலைவர் அருள்முருகன் கூறியதாவது:
சாலை போடுவதற்காக முதற்கட்ட பணி துவங்கியபோது அதற்காக மனித சக்தியை பயன்படுத்த வேண்டும். அப்போது நுாறு நாள் பணியாளர்கள் சாலை சீரமைப்பு பணி செய்தனர்.
அதில் பணி செய்தவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. பின், சாலை அமைக்கும் பணி, சில காரணங்களால் கைவிடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் ஜெயகுமார் கூறுகையில், 'கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப் பணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.